Today is Saturday 2021 Nov 27
நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி, விவேக் மரணம், Actor Vivek, Corona Vaccine, Vivek Death
பதிவு: 2021-10-22 12:02:37

``நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை'' என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக தமிழக அரசு பயன்படுத்தியது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள அச்சம் தெரிவித்தால் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட 2வது நாளில் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் மக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய பீதி தொற்றிக் கொண்டது. நன்றாக இருந்த விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்துவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தது. இதனை அப்போதைய அரசு மறுத்தது.

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் மரணம் குறித்து தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்த மத்திய குழு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17-ல் விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை.

ஏப்ரல் 15ம் தேதி கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் ஏப்ரல் 17-ல் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...